பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த், ஹரித்வாரில் உள்ள சிவன் கோயிலில் நண்பருடன் சேர்ந்து பிச்சைக்காரராக வேடமிட்டு பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். அழுக்கு துணிகள் அணிந்து, கழுத்தில் கியூஆர் கோட் தொங்கவிட்டபடி பிச்சை எடுத்ததில், 8 மணி நேரத்தில் சுமார் ரூ.4,000 கிடைத்தது. இது ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என கணக்கிட்டுள்ளார். இருப்பினும், பிச்சை எடுப்பது உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் சிரமமானது என்றும், சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
