டில்லியில் இன்று மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி மற்றும் ரஷ்ய அரசின் அறிவியல், உயர்கல்வித்துறை இணை அமைச்சர் மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டான்டின் இலிச் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது. இரு தரப்பினரும் உயர்கல்வித்துறையில் பரஸ்பர முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே உயர்கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர்.
