சேலம்: மேட்டூர் அடுத்த கோட்டையூரில் மாரியம்மன் கோயில் விழா ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. சாமி ஊர்வலம் சென்றபோது வழிவிடுமாறு சதாசிவம் என்பவர் தொடர்ந்து பைக் ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை சிலர் தாக்கியதாக புகார் எழுந்தது. இந்தத் தகராறு இருதரப்பு மோதலாக மாறியதைத் தொடர்ந்து சேலம் எஸ்.பி. தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
