Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 3 கிலோ சின்ன வெங்காயம்

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு 3 கிலோ சின்ன வெங்காயம் பரிசு

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு 3 கிலோ சின்ன வெங்காயம் வழங்கி ஹெல்மெட் போடலேன்னா பைனு , ஹெல்மெட் போட்டா ஆனியனு ! ! என்று பஞ்ச் டையலாக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் . பிள்ளைங்க அடம்

பிடிச்சா வாங்கித் தராதே வேக வாகனம்!லைசன்ஸ் இல்லாம ஓட்ட விட்டா பெற்றோருக்குக் கடுந்தண்டனை நிச்சயம் என்றும் அறிவுரை .

தஞ்சையில் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம், கிலோ 130 ரூபாய் விற்பனை ஆகி வரும் வேளையில் தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து வந்த

இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி 3 கிலோ சின்ன வெங்காயத்தை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக கொடுத்தனர்.

ஹெல்மெட் போடலைனா ஃபைன் ஹெல்மெட் போட்டு இருக்குறதால ஆனியன் என கூறி

வாகன ஓட்டிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து பல்வேறு வகையில் விழிப்புனர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக (இன்று) ) 05ம் தேதி மாலை தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அந்த சாலையில் ஹெல்மெட் போட்டு வந்தவர்கள் ஹெல்மெட் போடாமல் வந்தவர்கள் என அனைவரையும் தடுத்து நிறுத்தியதால் பதற்றத்துடன் நின்றனர்.

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு 3 கிலோ சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) கிஃப்டாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனங்களை ஒட்டி சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 16 பேர் கைது செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு வயசு வராம வண்டி கொடுத்தா மகன் வாழ்க்கையில் வரும் ஆபத்து . அவன் ரேஸ் ஒட்டி மாட்டினா பெத்தவங்களுக்கு கிடைக்கும் சிறை தண்டனை , சின்ன வயசு பிள்ளைக்குக் கொடுக்காதே ரேஸ் பைக்!
லைசன்ஸ் இல்லாம ஓட்ட விட்டா பெற்றோருக்கு விழும் போலீஸ் கேஸ்! என பொது அறிவுரை கூறி அனுப்பி வைத்தார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் .

error: Content is protected !!