Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய விசாரணை அமைப்புகளுக்கு………உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை

சி.பி.ஐ. விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்கவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ.அமைப்பின் முதல் தலைவரான டிபி கோலிவை நினைவு  கூர்ந்து  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

ஊழலுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணை அமைப்பாக உள்ள சி.பி.ஐ. தங்கள் விசாரணை வளையத்தை பல்வேறு வகையிலான குற்ற வழக்குகளை விசாரிப்பதிலும் அதிகரிக்க வேண்டும். இது சி.பி.ஐ.க்கு அதன் குறிக்கோளுடன் சேர்த்து கூடுதல் பொறுப்பை அளிக்கும்.

நாம் நமது விசாரணை அமைப்புகளை (சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, புலனாய்வுத்துறை) மிகவும் மெல்லிதாக பரப்பிவிட்டோம் என்று நினைக்கிறேன். நாட்டின்பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்கள், நாட்டிற்கு எதிரான பொருளாதார குற்றங்கள் மீது மட்டும் விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்தவேண்டும். வழக்குப்பதிவுசெய்வது முதல் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும். அதிகப்படியான வழக்குகள் இருப்பதால் டிஜிட்டல்மயமாக்குதல் நேரவிரயத்தை மிச்சமாக்கும்

விசாரணை அமைப்புகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். குற்றவியல் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!