Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியாவை குறிவைத்த Claude AI நிறுவனம்!

பெரும் முதலீட்டுடன் களமிறங்கிய Anthropic

இந்திய AI சந்தையில் புதிய அத்தியாயம்… தொழில்நுட்ப உலகின் கவனம் பெங்களூரு மீது!

செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்க நிறுவனமான Anthropic, இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. Claude எனப்படும் பிரபல AI உதவியாளரை உருவாக்கிய இந்த நிறுவனம், இந்தியாவை தனது உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய மையமாக மாற்றும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் AI தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் டெவலப்பர் சமூகத்தின் வளர்ச்சி Anthropic நிறுவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக Claude AI பயன்பாட்டில் இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. மென்பொருள் உருவாக்கம், கணினி நிரலாக்கம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளில் Claude அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனது வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் Anthropic நிறுவனம் பெங்களூருவில் தனது முதல் அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் டோக்கியோவுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட முக்கிய மையமாகும். இந்தியாவின் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் AI சூழல் இந்த முதலீட்டிற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவில் Anthropic நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடை தெரிவித்துள்ளார். Claude Code மற்றும் Claude Cowork போன்ற AI கருவிகளுக்கு இந்திய நிறுவனங்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமான சேவை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் மற்றும் சட்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் Claude தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் Anthropic நிறுவனத்துடன் இணைந்து புதிய AI அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றன.

இதற்கிடையில், Anthropic நிறுவனம் தனது Project Glasswing திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கும் மேம்பட்ட Claude Mythos AI தொழில்நுட்ப அணுகலை வழங்கியுள்ளது. இணைய பாதுகாப்பு மற்றும் மென்பொருள் குறைபாடுகளை கண்டறிவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி AI நிறுவனங்கள் இந்திய சந்தையை நோக்கி போட்டியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் Anthropic நிறுவனத்தின் இந்த அதிரடி விரிவாக்கம், இந்திய AI துறையில் புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!