Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை…. குடும்பத்தினருக்கு ஆறுதல்

பகுஜன் சமாஜ்  கட்சி மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த  6ம் தேதி  சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.  அவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்குச் சென்று  அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது பொற்கொடி கதறி அழுதார். அவருக்கு  முதல்வர் ஆறுதல் கூறினார்.

முதல்வருடன் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன்,  ஆகியோரும் சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!