Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.

அதைத்தொடர்ந்து  மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.  இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி  தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.  இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை மும்பை செல்கிறார்.  பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்  முதல்வர்  கூட்டம் முடிந்து நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!