Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல் கூறியதாவது: இரண்டு நாட்களில் சொல்ல கூடியது ஜோசியமாக தான் இருக்க முடியும். 6 நாட்களில் சொல்ல முடிவது அப்படி தான் இருக்க முடியும்.

15 நாட்களிலும் அப்படி தான் இருக்க முடியும். முதல்வர் விஜய்க்கு ஒரு 6 மாதம் டைம் கொடுக்க வேண்டாமா? புதியவர்கள் நிறைய பேர் வந்து இருக்கிறார்கள். அதனால் புதியவர்கள் என்பது அரசியலுக்கு புதிது கிடையாது. சுதந்திர இந்தியா கிடைத்த போது எல்லோரும் புதிய அமைச்சர்கள் தான்.அதனால் புதியவர்களை வந்து நாம் கம்மியாகவும் எடை போட வேண்டாம். ரொம்பவும் எதிர்பார்க்க கூடாது.

என்ன நடக்கிறது என்பதை பார்த்து கொண்டு, நீங்கள் தானே ஓட்டு போட்டீர்கள்; அது நல்ல படியாக நடக்கிறதா என்பதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். நாங்களும் கண்காணிக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அனைவருமே புதியவர்கள்தான். எனவே, புதியவர்களைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது, காத்திருந்து கண்காணிப்போம்” என கூறியுள்ளார்.

இவவாறு கமல் கூறினார்.

error: Content is protected !!