.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இன்று அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட சேவல் சண்டை போட்டியில், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற சேவல்களில் எந்த சேவல் வெற்றிபெறும் என்பதனை முன்கூட்டியே கணித்து அந்த சேவல்கள் மீது சுமார் ₹3லட்சம் வரை பார்வையாளர்கள் பந்தயம் கட்டினர்.
சேவல் சண்டை நடத்துவதை அந்த பகுதி போலீசார் கண்டுகொள்ளுவதே இல்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை நடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.