Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற பெண், போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் தொழிலதிபராக இருப்பவர் ஹிதேந்திரா சிங். மதுபான தொழில் செய்து வந்த அவர், பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட தொடங்கினார். அப்போது, நில பேரம் தொடர்பாக ஆல்கா தீட்சித் என்பவருடன் சிங்கிற்கு தொடர்பு ஏற்பட்டது.ஆல்கா, லக்கன் சிங்கை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவர்கள் மூவரும் நட்புறவை ஏற்படுத்தி கொண்டனர். ஆனால், சில நாட்களில், ஆல்காவுக்கு எதிராக 17 குற்ற வழக்குகள் உள்ளன என தெரிய வந்த சிங் அதிர்ச்சியானார்.இதனால், அவருடனான தொடர்பை சிங் முறித்து கொண்டார். இதனை அடுத்து, சிங்குக்கு தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது. தொழிலை தொடர வேண்டுமென்றால், ரூ.1 கோடி தர வேண்டும் என ஆல்கா, அவருடைய மகன் ஜெய்தீப் தீட்சித் மற்றும் லக்கன் சிங் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்றும் அச்சுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான புகார் ஒன்றை சிங் போலீசில் அளித்துள்ளார் என காவல் துணை ஆணையாளர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார். அச்சுறுத்தல் விடுத்தவர்களுடன் ஸ்வேதா ஜெயின் என்பவரும் சேர்ந்து கொண்டார்.இதுதவிர, போலீஸ் கான்ஸ்டபிள் வினோத் சர்மா என்பவர் விசாரணை என்ற பெயரில், சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுபற்றி விசாரித்த போலீசார், போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!