Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை….ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.62 லட்சம் பறிமுதல்….

கோவை, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியை கடந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கனரக சரக்கு லாரிகள் கடந்து சென்று வரும், க.க சாவடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆர்.டி.ஓ சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு சரக்கு வாகனமும் மாநில எல்லையை கடக்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இன்று அதிகாலை க.க சாவடி ஆர்.டி.ஒ சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம்

இருந்து 3,21,000 ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரோஸ்லின் என்ற அலுவலக உதவியாளரிடம் இருந்து 38,000 ரூபாய் கணக்கில் வராத பணம் பறுமுதல் செய்யப்பட்டது. சோதனைச் சாவடியில் இருந்த கடிதப் பெட்டியில், 3,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராமல், லஞ்சமாக பெற்ற இந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!