டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் 150 பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செப்.2) 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
