கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் நேரில் ஆய்வு செய்தார்.
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசால் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுடைய பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கரூர்

சுங்ககேட் பகுதியில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் முறையாக வீடு தேடி வழங்கப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக பேசிய ஆட்சியர், மாதந்தோறும் வழங்க வேண்டிய அனைத்து ரேஷன் பொருட்களும் தடையின்றி கிடைக்கிறதா, விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறிந்தார்.
