Skip to content

செங்கிபட்டி அருகே கல்லூரி பஸ் மோதி.. மூதாட்டி பலி

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ எல்லைக்கால் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சாலையை மூதாட்டி ஒருவர் கடந்துள்ளார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி ஏ.லோகேஷ் என்பவர் ஓட்டி வந்த கல்லூரி பஸ் அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். . விபத்தில் இறந்த மூதாட்டிக்கு 75 வயது இருக்கும். அவர் யார் எந்த ஊர் என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆண்டர்சன் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!