Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனிபாபா பெயரில் புதிய அமைப்பு.. தஞ்சை கல்லூரி மாணவர் கைது..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவருடைய மகன் அப்துல் லத்தீப் (19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அகில இந்திய புனித போராளி பழனிபாபா மாணவர்கள் அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் பெயரில் ‘வாட்ஸ்-அப்’ குழுவை ஏற்படுத்தி இளைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்.மேலும் ராமர் கோவில் கட்டினால் குண்டு வைத்து தகர்ப்போம் என்பன போன்ற கருத்துகளை அந்த  ‘வாட்ஸ்-அப்’ குழுவில் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் அப்துல் லத்தீப்பின் நடவடிக்கைகளை போலீசார்  கண்காணித்து வந்தனர். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துரைராஜ், பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் லத்தீப்பை கைது செய்தனர். மேலும் அவரது ‘வாட்ஸ்-அப்’ குழுவில் உள்ள வாலிபர்களின் எண்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!