Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை குரும்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54). இவருடைய மகள் பூர்வஜா (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து பூர்வஜா தனது பெற்றோரிடம் சென்று பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூர்வஜா, கோபத்தில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டினார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அறையின் கதவை பலமுறை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் பூர்வஜா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பூர்வஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!