Skip to content
Home » கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

கல்லூரி மாணவராக கலக்கும் ‘மணிகண்டன்’….

  • by Senthil

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கல்லூரி மாணவராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

photoபீட்சா 2, விக்ரம் வேதா, காலா என பல படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து அசத்திய மணிகண்டனுக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்த படம் ‘ஜெய்பீம்’. அந்த படத்தில் மணிகண்டனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ‘குட்நைட்’ எனும்படத்தில் நடித்தார்.  இந்த நிலையில் தற்போது இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் மணிகண்டன். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இந்த படத்தின் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!