திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பத்ம பூஷன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர்- மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பெஞ்சமின் இளங்கோ, கோட்ட தலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், உறையூர் பாக்யராஜ், காட்டூர் ராஜா டேனியல் ராய், அறியமங்களம் அழகர், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல், தில்லைநகர் ராகவேந்திரன், மாணவர் காங்கிரஸ் நரேன், ஐடி பிரிவு கிளமென்ட், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், ஷாஹுல் அமீது சிவாஜி மன்ற நிர்வாகிகள் சீனிவாசன், ராஜா, சிவாஜி பெரியதம்பி, மாதவன், மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சிவாஜிகணேசன் திருவுருவ சிலைக்கு திருச்சியில் காங்கிரஸ் மரியாதை
