தஞ்சாவூரை அடுத்த விளார் ரோடு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம்

ஆகியவை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன அதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்து பூர்ணாஹீதி நடைபெற்றது, பின்னர் மேளதாளங்கள்

முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை கொண்டு சென்றனர், பின்னர் அங்கு விமான கோபுரத்திற்கு பூஜைகள் செய்து

புனித நீர் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்று மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
