தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அன்னுக்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய
திருப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள்
தொடங்கப்பட்டு யாகசாலை பூஜைக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு யாக குண்டலங்கங்களில்
சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் வாசித்து நான்கு கால யாக பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ணாஹுதி நடைபெற்று கடங்கள் பரப்பட்டு மேல வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் விமானங்களின் கோபுர கலசங்களுக்கும் மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு
அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னுக்குடி கிராம நாட்டாமைகள்,பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
