திருச்சியில் ரூ.106 கோடியில் நடை பெற்று வரும் காவிரி புதிய பாலம் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறை வடைந்துள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு முன்பாக முக்கிய பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.
பூலோகவைகுண்டம் என போற்றப் படும் ஸ்ரீரங்கத்தை திருச்சியில் இருந்து காவிரி ஆறு தனியாக பிரிக்கிறது. ஸ்ரீரங் கத்தில் இருந்து திருச்சி வருவதற்கு கடந்த 1976-ம் ஆண்டு காவிரியின் குறுக் காக மாம்பழச்சாலையையும், திருச்சி சிந்தாமணி பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண் டுகள் நிறைவடைந்து விட்டதால் அடிக்கடி பாலத்தை மூடி பழுதுபார்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து :
பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ் சாலை துறை சார்பில் திட்டம் தயா ரிக்கப்பட்டது. இதற்காக நிலம் கைய கப்படுத்தப்பட்டு ரூ.106 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணியானது கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 545.65 மீட்டர் நீளம், நடைபாதையுடன் சேர்த்து 17.75 மீட்டர் அகலத்தில் நான்கு : வழிச்சாலையாக இந்த பாலம் கட்டு மான பணியானது நடந்து வருகிறது. மொத்தம் 17 கண்களுடன் (பைல் கேப்) இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 15 பைல் கேப்முடிந்துவிட்டதால் அவை ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து மேல் எழும்பி விட்டன.
60 சதவீத பணிகள் நிறைவு.
சிந்தாமணி பகுதியில் மட்டும் இன்னும் 2 பைல் கேப்கள் அமைக்கப்படவேண்டியது இருப்பதால் அந்த பகுதி யில் மட்டும் தற்போது பொக்லைன் எந்திரம் உதவியுடன் தண்ணீரை திருப்பிவிடப்பட்டு இரவு பகலாக பணிகள் மும்முரமாக நடந்து வரு கிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது:- காவிரி புதிய பாலம் கட்டுமான பணியானது இதுவரை 60 சதவீதம் நிறைவு பெற்று : உள்ளது. காவிரியில் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து : தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர் : பார்க்கப்படுவதால் அதற்கு முன்பாக : நீரோட்டத்தினால் பணிகள் பாதிக்கப்ப டாத அளவுக்கு துரிதமாக பணிகள் நடந்து வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் பாலம் கட்டுமான பணி : வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு களை முழுவதுமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
