Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இனி வீட்டில் இருந்தபடியே மருத்துவ முன்பதிவு… நலம் AI சேவை துவக்கம்

இனி வீட்டில் இருந்தபடியே மருத்துவ முன்பதிவு-நலம் AI துவக்கம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் இன்று (08.07.2026) உரையாடளுடன் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற பெயரில் WhatsApp Chatbot சேவையை மாண்புமிகு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.இச்சேவையின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின்

சுய பதவி (one-time Registration) மற்றும் OP முன்பதிவை (Appointment booking) செய்து கொள்ள முடியும். இச்சேவை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலன் நெஞ்சக நோய் பிரிவில் (Department of Respiratory Medicine) சோதனை முறையில் நாளை முதல் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சற்று முன் நலம் AI வாட்ஸ்அப் Chatbot சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்துள்ளார்.இனி வாட்ஸ்அப் மூலமே மருத்துவமனை முன்பதிவை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்.

அரசு மருத்துவமனைகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து OP (OP – Outpatient) சீட்டு வாங்கும் பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக, ‘நலம்AI’ என்ற வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று முதல் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டம் முதல்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் (RGGGH) நெஞ்சக நோய் பிரிவில் இன்று முதல் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
இங்கு ஏற்படும் வரவேற்பைத் தொடர்ந்து விரைவில் இச்சேவை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நலம் AI-ஐப் பயன்படுத்துவது எப்படி?

  • உங்கள் மொபைலில் 96192 22999 என்ற அரசு அறிவிப்பு எண்ணைச் சேமித்துக் கொள்ளுங்கள்.
  • WhatsApp செயலியைத் திறந்து, அந்த எண்ணிற்கு ‘Hi’ என்று செய்தி (Message) அனுப்புங்கள்.
  • உடனடியாக உங்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷன் காட்டும்.
  • கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்து உங்கள் மருத்துவ நேரத்தை (Appointment) முன்பதிவு செய்யுங்கள். மொழியை தேர்வு செய்தவுடன், “NalamAI (TN-NHM)-க்கு வரவேற்கிறோம்! பதிவு, மருத்துவர் மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் ஆகியவற்றில் நான் உங்களுக்கு உதவ முடியும்” என்ற குறுஞ்செய்தி வரும்.அதன் பின் உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழைந்தால், உங்களுக்கான ஓபி சீட்டு வாட்ஸ்அப்பிலேயே கிடைத்துவிடும்.
error: Content is protected !!