கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி மட்டத்திலான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வீடு தோறும்

பிரச்சாரம், பூத் மட்ட பணிக்குழுக்கள் அமைத்தல், இளைஞர் மற்றும் பெண்கள் அணிகளின் செயற்பாடு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.
மேலும், தேர்தல் நாளில் ஒழுங்கான வாக்கு சேகரிப்பு பணிகளை முன்னெடுக்க ஒவ்வொரு மண்டல பொறுப்பாளர்களுக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டன. பொதுமக்களை நேரடியாக சந்தித்து அரசின் சாதனைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைப்பதற்கான செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டது.

