Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் புகார் மனு

கரூரில் ஒப்பந்த ஊழியர்கள் கலெக்டரிடம் புகார் மனு

கரூர் தாந்தோன்றிமலையில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில், வெளிமுகமை நிறுவனத்தின் மூலம் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களது ஊதியப் பிடித்தம் மற்றும் பணி ஒதுக்கீடு தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கரூர் தாந்தோன்றிமலையில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில், ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமதி, 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ம.மாணிக்கம், ஆர்.மல்லீஸ்வரி மற்றும் முருகேஸ்வரி உள்ளிட்டோர் பணி மூப்பின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,ஊதியப் பிடித்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் சார்பில், ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம், 26 நாட்களுக்கு மொத்தம் 11 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியமாக வெளிமுகமை நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வெறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலுத்தப்படுவதாகவும், மீதமுள்ள தொகை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும்.

மேலும், தங்களுக்கான பி.எஃப். தொகை முறையாக வழங்கப்படவில்லை என்றும், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டிய 4 சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பணியாளர்களுக்கு பணி வழங்கும்போது, மூப்பு நிலை அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும், ஆனால் தற்போது இப்போது வந்தவளுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாத்தினர்.

குறிப்பாக, சுமதி மற்றும் மாணிக்கம் ஆகியோருக்கு உரிய பணி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், நிலுவையில் உள்ள ஊதியத் தொகையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, ஒப்பந்த ஊழியர்களின் குறைகளை விசாரித்து, அவர்களுக்கு உரிய நிலுவைத் தொகையை பெற்றுத்தருவதோடு, முறையான பணி வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!