அதிகபேருக்கு கொரோனா…. கிராமத்துக்கு சீல்…

115
Spread the love
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு தற்போது 338 பேர் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து சீல் வைத்தனர்.  இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

LEAVE A REPLY