Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

 திருவல்லிகேணி விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அந்த விடுதிக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள அறையில் தங்கியிருந்த சபீர் ரஹ்மான் என்பவரின் கட்டில் மெத்தைக்கு அடியில், கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஷபீக் ரஹ்மான் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவற்றைத் போலீசார் பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது, மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விடுதி அறையில் தங்கியிருந்த சபீர் ரஹ்மானைப் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!