Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கண்ணாடித் துகள்களை அகற்றிய தம்பதிக்குப் பாராட்டு

தஞ்சை பிரதான சாலையில் கொட்டிக் கிடந்த கண்ணாடி துகள்களை துடைப்பதால் துடைத்து அகற்றிய தம்பதிகள் வாகனங்கள் கண்ணாடியில் ஏறி பஞ்சர் ஆயிடக் ககூடாது
குழந்தைகள் காலில் கண்ணாடி குத்தி விடக்கூடாது என அவர்கள் சொன்ன வார்த்தை சமூகத்தின் மீது உள்ள அக்கறையை காட்டியது

தஞ்சை ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் டாட்டா ஏசி வாகனத்தை கணவர் ஓட்டி வர மனைவி அருகில் அமர்ந்து வந்தார்

அப்போது எதிர்பாராத விதமாக காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து கண்ணாடி துகள்கள் சாலையில் சிதறின

இதனை கண்டு கொள்ளாமல் செல்ல முயலாமல் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கணவன் மனைவி இருவரும் இறங்கி வந்து துடைப்பத்தால் கூட்டி கண்ணாடி துகள்களை சாலையில் இருந்து அகற்றினர்

ஏன் இதை செய்தீர்கள் என்று கேட்டபோது பின்னால் வரும் வாகனம் கண்ணாடியில் ஏறி பஞ்சர் ஆயிடக் கூடாது என்பதற்காகவும் குழந்தைகள் காலில் கண்ணாடி குத்தி விடக்கூடாது என்பதற்காகவும் கூட்டினோம் என அவர் சொன்ன வார்த்தை சமூக அக்கறையை காட்டியது.

error: Content is protected !!
Secret Link