Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது…பெ.சண்முகம்

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது..பெ.சண்முகம்

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் CPM பங்கேற்காது.அதே சமயம் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும் – CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவிப்பு

தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னையில் நாளை (செப். 9) நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் தலைமைக் குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:

“தவெக அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெளிவாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் ஒரு ஆட்சி அமையாமல் போய்விடும் என்ற காரணத்தால்தான் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம்.

திமுக, தவெக என எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். நாங்கள் இணைந்து அடுத்த மாதத்தில் திருச்சியில் பேரணி நடத்தவுள்ளோம். நாங்கள் இணைந்து பயணிக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்றவை குறித்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!