Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து , 3பேர் பலி

விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில்  ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.  ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த  பட்டாசு  ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு இருந்தது.  இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.

இன்று காலை திடீரென இங்கு விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணி செய்து கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி இறந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு தீயணைப்பு படையினர் வந்து  போராடி தீயை அணைத்தனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடக்கிறது. போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!