Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூர் டெஸ்ட்……55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான ஆட்டம்….. 4 பேர் டக் அவுட்

இந்தியா- நியூசிலாந்து மோதும்  முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று  ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.  இந்தியா மிக மோசமான நிலையில் ஆடி வருகிறது.  ஓவருக்கு ஒன்றரை ரன்  என்ற அடிப்படையில்   ரன்களை  சேகரித்து வருகிறது.  மதிய உணவு இடைவேளைக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதில்  கோலி,  சர்ப்ராஸ்கான், ஜடேஜா, கே. எல் ராகுல் ஆகிய  4 பேரும்  டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜெய்ஸ்வால் 13,  கேப்டன் ரோகித் சர்மா 2,  எடுத்து அவுட் ஆனார்கள்.

தற்போது  பண்ட் 15 ரன் எடுத்து களத்தில் நிற்கிறார். மதிய உணவு இடைவேளகை்கு பின்னர்  அஸ்வின் களம் இறங்குவார். நியூசிலாந்தின் பந்து வீச்சில் இந்திய வீரர்கள்  திணறிவிட்டனர்.ஓ ரூர்க்  மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 23.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.1969க்கு பிறகு  சொந்த மண்ணில் இந்தியா இப்போது தான் இந்த அளவு மோசமாக ஆடி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!