கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே குத்தாரிப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று காணப்பட்டது. பாறையின் மீது முதலை படுத்திருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலையை பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி ஆற்றில் முதலை-பொதுமக்கள் அதிர்ச்சி!
