பொது வாழ்வில் உள்ள பெண்கள் மீது தொடர்ந்து அநாகரிக தாக்குதல்கள் நடத்தப்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உடை மற்றும் தோற்றத்தை வைத்து பெண்களை விமர்சிப்பது பிற்போக்குத்தனம் எனக் குறிப்பிட்டுள்ளார். கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
