புதிதாக நியமிக்கப்படும் கோச்சுக்கு, தனது உதவியாளர் குழுவை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஆனால், அணியின் முக்கிய வீரர்களின் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளார். இதனால் பிளெமிங்கின் கீழ் பணியாற்றிய ஹஸ்ஸி (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் எரிக் சைமன்ஸ் (பந்துவீச்சு ஆலோசகர்) உள்ளிட்டோர் நீடிப்பது சந்தேகமே.
