Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்கக்கடலில் உருவாகிறது ‘அக்வான்’ புயல்

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு அலர்ட்!

மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மறுதினம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்கு பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்றும், நாளையும், நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறி இருந்தது.

இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று (நவ.13) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 16-ம் தேதி மாலை மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக (அக்வான் புயல்) மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!