Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

வங்கக்கடலில் கடந்த 21 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்lJ/ ,டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது.

இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே நேற்று   நள்ளிரவு முதல் இன்று காலை  வரை கரையைக் கடந்தது. நள்ளிரவு 12.20 மணிக்கு கரையை  கடக்க தொடங்கியது.  இன்று காலை 8.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் புயல் கரையைக் கடந்தது.12 கி.மீ. வேகத்தில்  புயல்  மேதுவாக நகர்ந்ததால்  ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில்  பலத்த காற்றுடன் மழை கொட்டியது.   8.30 மணிக்கு பிறகு  புயல் வலுவிழந்தது.

முன்னதாக, புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்தது. வன்சபா, பத்ரக், தமாரா உள்ளிட்ட இடங்களில் பெய்த  கனமழையால் மரங்கள் சரிந்து விழுந்தன. புயல்  கரை கடந்ததையொட்டி   பெரும்பாலான பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!