தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து பாதிப்புக்கு உள்ளானது.. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்தனர்..
இதை அறிந்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கும்போது..
பாபநாசம் பகுதியில் 15-நிமிடம் அடித்த சூறை காட்டினால் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பருவச் சீற்றம் காரணமாக இயற்கைச் சீற்றம் தொடர்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
பாபநாசம் வட்டாரத்தில் கிட்டத்தட்ட-432 ஹெக்டர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதை தோட்டக்கலை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையிலே கணக்கெடுத்த வகையில் சுமார் 66-ஹெக்டேர் 33-சதவீதத்திற்கு அதிகமான வாழைகள் பாதிப்படைந்துள்ளதாக கணக்கெடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக இந்த கணக்கெடுப்ப தொடர்ந்து நான்கு நடத்தப்பட இருக்கிறது..
கணக்கெடுப்பு முடிந்த பிறகு உரிய முறையில் தமிழக முதலமைச்சரிடம் இந்த துயரத்தை எடுத்துக் கூறி, பாதிப்புகளை வெளியிட்டு உரிய நிவாரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும்..
இரண்டாவதாக பயிர் பாதுகாப்புக்காக இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம் இருக்கிறது இந்த பகுதியை பொறுத்தவரையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் 432-ஹெக்டரில் வாழை பயிர் செய்து இருந்தாலும் ஒருவர் கூட காப்பீட்டு திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்ற செய்தி தெரிய வருகிறது..
விவசாயிகள் கேட்கும் போது காப்பீட்டு திட்டத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும், அதில் இருக்கும் கட்ட முடியாத சூழ்நிலை இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இருப்பினும் அந்த நடைமுறை எளிமைப்படுத்தி முழுமையாக அவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தை பெறக்கூடிய வகையிலே அவர்கள் காப்பீடு செய்யக்கூடிய முயற்சிகள் அதிகாரிகள் ஈடுபட சொல்லி வலியுறுத்தி இருக்கிறோம் அந்த வகையிலே விவசாயத்தினுடைய துயரை துடைக்க கூடிய வகையில் நிச்சயமாக நிவாரணங்கள் தரப்படும் அதற்கான விழிப்புணர்வுகளும் கட்டாயமாக ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்..
ஆய்வின் போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி, தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
