மூத்த நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது
2024ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருது கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக். 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இன்றைய சினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 1 திரைப்படத்தில் அந்த கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
கன்னடத்தில் 1973ல் சங்கல்பா திரைப்படத்தின் மூலம் நாக் தனது முதல் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹம்சகீதே, சந்தனத கொம்பே, கணேஷனா மதுவே உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார்.
கன்னட சினிமா தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த 300 படங்களில் 250 படங்கள் கன்னட சினிமா.
