பயிர் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வரும்.14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி, நாகை மாவட்டங்களில் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஆக.22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
