Skip to content
Home » “DD Retturns” பட புரோமோஷன்… திருச்சி வந்த நடிகர் சந்தானம்.. செல்பி எடுத்த ரசிகர்கள்..

“DD Retturns” பட புரோமோஷன்… திருச்சி வந்த நடிகர் சந்தானம்.. செல்பி எடுத்த ரசிகர்கள்..

  • by Senthil

தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் ஜூலை 28 ஜூலை 28ஆம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தினை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார், சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரதீப் ராவத் மற்றும் மசூம் ஷங்கர் ஆகியோர் டிடி ரிட்டர்ன்ஸிற்காக இணைக்கப்பட்ட மற்ற பிரபல நடிகர்கள் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி திருச்சி சிறுகனூர் அருகே உள்ள

தனியார் (SRM) கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகரும் தயாரிப்பாளருமான சந்தானம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த சந்தானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனியார் கல்லூரிக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக திருச்சி ஏர்போட்டில் நடிகர் சந்தானத்துடன் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!