தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த DSP உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நாகியம்பட்டி வாக்குச்சாவடியில் பணியிலிருந்த SSI கண்ணதாசன்(59) நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த DSP ராமகிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்ட NIB பிரிவில் பணிபுரிந்து வந்தவர் ஆவார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
