கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி எண் 110 படி சுகாதாரப் பணியாளர் நியமனம் பெற்று கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.3000 பெற்று பணிபுரிந்து வந்துள்ளார்.
நிரந்தர பணி வழங்க கடந்த 2021ம் ஆண்டு பல மனுக்கள் பரிந்துரை கடிதங்கள் பெற்று பலமுறை அலைக்கழிப்பு செய்ததாகவும் இதனால் நீதிமன்றம் வாயிலாகவும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 4ம் தேதி பணியில் இருந்த மயில்ராஜ் பணி

நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோரியும் முறையாக தகவல் இல்லை, புதிய பணி நியமனம் முறையான வழியில் நடைபெறாத நிலையில் புதியதாக ஒருவருக்கு பணி அமர்த்தப்பட்டது. குறித்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 6ம் தேதி டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளில் பணிபுரிந்த பள்ளி முன்பு அம்பேத்கார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பிறகு இன்னுயிர் நீர்த்தல் செய்வதாக கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் என்ற அறிவிப்பு விளம்பர பிளக்ஸ் பேனர் பள்ளி முன்பு வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

