Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது

ஆண்டிமடத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல்… தலைமறைவான விசிக நிர்வாகிகள் 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்முருகன். இவர் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்

காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விசிக நிர்வாகிகளான பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆண்டிமடம் அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து, தாக்கவும் முயற்சி செய்தனர். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் தமிழ்முருகன் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பாக்யராஜ் மற்றும் வேல்முருகனை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகியான பாக்கியராஜ் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!