Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நிவாரணம்!

காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நிவாரணம்!

காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு விவகாரம் – பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத்,மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் நிவாரணத் தொகை வழங்கினர்

சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், படகு பழுதடைந்து முரசு புயலில் சிக்கி கடலில் மூழ்கி

உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக அரசின் செலவில் கொண்டுவரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மரிய வில்சனை சந்தித்தனர்.அப்போது மேற்கொண்டு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டியில் ;-

அரசு தரப்பில் ஏற்கனவே ஒரு குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணத் தொகை  வழங்கப்பட்டது இன்றைய தினம் அமைச்சர் ஸ்ரீநாத்,மரிய வில்சன் கூடுதலாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.இதுவரை மொத்தம் 7 லட்சம் ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

20 லட்ச ரூபாய் அரசு வழங்க வேண்டும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் தரப்பில் வைத்துள்ளோம் அரசு நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளனர் என்றனர்.

error: Content is protected !!
Secret Link