கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் வெட்கப்பட வேண்டிய விஷயம்,சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் பேட்டி
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ;-
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்,ஒரு பெண்ணாக இதனை கண்டிக்கிறேன் தலைமைச் செயலாளர் இடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் கொடுத்திருந்தால் நிச்சயம் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுத்திருப்பார். எங்களுக்கு என்றைக்கு தகவல் தெரிந்ததோ அன்றைக்கு நாங்கள் கருத்தை சொல்லி விட்டோம்.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்,சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்கும் என்றார்.
