Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எரிப்பு: தொழிலாளர் முன்னணியினர் கைது

திருச்சியில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எரிப்பு: தொழிலாளர் முன்னணியினர் கைது

திருச்சி தில்லை நகர் 7-வது குறுக்குத் தெருவில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நகலைக் கிழித்து எரித்த ஜனநாயக தொழிலாளர் முன்னணியினரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள நில அளவைக் கல் மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று தில்லை நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை அவர்கள் கிழித்தும், தீயிட்டு எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி மாநகரக் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களிடமிருந்த எஞ்சிய உத்தரவு நகல்களைப் பறிமுதல் செய்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

error: Content is protected !!
Secret Link