தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர் சித்திக், “கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தவெக ஆட்சியில் ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சம்பளத்திற்கான செலவினங்களை சரி செய்துள்ளதால் நிதி குறைந்துள்ளது. இந்திய அரசின் அனுமதியோடுதான் கடன் வாங்குகிறோம். 1.22 லட்சம் கோடி இந்த ஆண்டு கடன் வாங்க போறோம் … அடுத்த 50 ஆண்டுகளுக்கு கடன்களை குறைக்க முடியாது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லும்” என்றார்.
