Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளி பட்டாசு குப்பை…….புதுக்கோட்டையில் 150 டன் அகற்றம்

தீபாவளியை ஒட்டி கடந்த 2 தினங்களாக  மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.  இன்று அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.  இதில் 50 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 400 தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இன்று குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்தும் பணியை  மேயர்  திலகவதி செந்தில் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!