Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு சிறப்பு ரயில்…. கூட்டம் இல்லாததால் பயணிகள் ஜாலி

தீபாவளி பண்டிகை  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள்  அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் கோவையில் இருந்து திண்டுக்கல்லுக்கு  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மெமு எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயில் கோவையிலிருந்து 9.35 மணியளவில் புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி வழியாக 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது.

அங்கிருந்து மறுமார்க்கமாக  பிற்பகல் 2 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடைகிறது. இன்று

முதல் 6ம் தேதி வரை இந்த ரயில்  இயக்கப்பட உள்ளதாகவும் இடையில் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் இயக்கப்படாது என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில்  ரிசர்வேஷன் இல்லாமல் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் சேவை குறித்து மக்களுக்கு தெரியாததால்  இன்று காலை  ரயிலில் கூட்டமின்றி காணபட்டது. கூட்டம் இல்லாததால்  இன்று  பயணம் செய்த பயணிகள் சவுகரியமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!