Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

தலைநகர் டில்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக கோர்ட்டு வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷவடசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் பின்னர் சிறிது நேரத்தில் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!